Sports
"நேரலையில் ஹேமங் பதானியின் கையை உடைத்த ஸ்ரீகாந்த்" -வலியில் துடித்த பதானி.. நடந்தது என்ன ?
ஆசிய கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரவு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பு வருகிறது. இதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனையாளர்களாக இந்திய அணியில் முன்னாள் வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சடகோபன் ரமேஷ், சுப்ரமணியம் பத்ரிநாத், லட்சுமிபதி பாலாஜி,ஹேமங் பதானி போன்றோரும், நானி, முத்து,பாவனா போன்றோரும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய முதல் ஆசிய கோப்பை போட்டி துவங்குவதற்கு முன்பாக ஹேமங் பதானி, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் அணியின் திறன்கள் பற்றியும், போட்டி நுணுக்கங்கள் பற்றியும் நேரலையில் விவாதித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, இலங்கையின் பானுகா ராஜபக்சே எப்படி ஆடுவார் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேட்டால் செய்துகாட்டிய போது பேட் அருகில் நின்றுகொண்டிருந்த ஹேமங் பதானியில் முழங்கையில் பட்டது. இதனால் ஹயையோ என்று சத்தம் போட்டுக் கொண்டே ஹேமங் பதானி சில அடிகள் நகர்ந்தார். முதலில் மெதுவாக அடி பட்டிருக்கும் என அனைவருமே சகஜமாக சிரித்து பேசினர்.பின்னர் ஹேமங் பதானி வலியால் துடிப்பதை கண்ட ஸ்ரீகாந்த் தனது பாணியில் 'சாரி டா டேய்” என்று நேரலையில் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து ட்விட்டரில் கூறியுள்ள ஹேமங் பதானி “நான் எப்படி இருக்கிறேன் என்று அனைவரும் விசாரிக்கின்றனர். தற்போது நான் பயங்கரமான வலியில் இருக்கிறேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏற்படவில்லை. அதன் அப்பட்டமான அதிர்ச்சியுடன் மற்றும் மருந்துகளை எடுத்து வருகிறேன். விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு வருவேன் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?