Sports
அடடா.. தமிழ்நாட்டு தோசையின் சுவையே தனிதான்.. ட்ரெண்ட் ஆகும் வெளிநாட்டு செஸ் வீரரின் ட்வீட் !
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்தது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு அதில் போட்டிகள் மிகசிறப்பாக நடைபெற்றது.
இந்த தொடரின் ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கலம் கிடைத்தது. மேலும் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.அதேபோல மகளிர் பிரிவில், இந்திய 'A' அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெண்கலம் வென்றது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்த போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசுக்கு செஸ் வீரர்கள், செஸ் கூட்டமைப்பு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் மிகச்சிறப்பானது இதுதான் என பாராட்டப்பட்டது. தமிழக உணவையும், மக்களையும் வெளிநாட்டு வீரர்கள் புகழ்ந்து தள்ளியிருந்தனர்.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த கிரிட் வான்டே தமிழ்நாட்டின் வத்தக்குழம்பு தனக்கு மிகவும் பிடித்ததாக குறிப்பிட்டு இருந்தார். தற்போது இவர் தனது தாய் நாக்கு திரும்பிய நிலையில் தமிழ்நாட்டு உணவு மீதான ஈர்ப்பு குறையாமல் இருக்கிறார்.
இது குறித்து தொடர்பாக கிரிட் வான்டே வெல்டே தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவுக்கு வந்த எனது தாய்க்கு, அங்குள்ள உணவுகள் மிகவும் பிடித்து போய்விட்டது. அங்கிருந்த உணவுகளின் புகைப் படங்களை பார்த்துவிட்டு, தற்போது அவர் எங்களுக்கு வீட்டிலேயே தோசை சுட்டு கொடுத்தார்' என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!