Sports
தென் ஆப்ரிக்காவில் களமிறங்கிய ஐ.பி.எல் அணிகள்.. ஜோகனஸ்பர்க் அணியை தட்டி தூக்கிய CSK!
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐ.பி.எல் பாணியிலான தொடரை ஆரம்பித்துள்ளது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரில் அணிகளை ஏலம் எடுக்க அறிவிப்பு வெளியானது. இந்த தொடரில் அணிகளை வாங்க ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், போர்ட் எலிசபத் அணியை சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேபிடல்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வாங்கியுள்ளது
Also Read
-
#TNElection2026Breaking : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
-
தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : யார் யார் எந்த தொகுதியில் போட்டி?
-
தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : DravidianModel 2.0 Starts Now - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க கூட்டணி : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் இதோ!
-
CPM, CPI கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன? : முழு விவரம் இதோ!