Sports
ரோகித்தால் காயமடைந்த குழந்தை.. நிறுத்தப்பட்ட ஆட்டம்.. சிகிச்சைக்கு விரைந்த மருத்துவ குழு - நடந்தது என்ன?
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை சமன் செய்து, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 25.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 5 சிக்ஸர் 7 பவுண்டரிகளோடு 58 பந்தில் 76 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், 18.4 ஓவரில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.
இந்த நிலையில், ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர் ஒன்று பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த குழந்தையின் மேல் பட்டது சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லி வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு பந்தை ஷார்ட் - பந்தாக வீச, அதை மடக்கி ரோகித் சர்மா சிக்ஸருக்கு விளாசினார்.
இந்த பந்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த குழந்தையின் மேல் பட்டது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஆட்டம் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. உடனே களத்திலிருந்த இங்கிலாந்து அணியினரின் மருத்துவக்குழு அந்தக் குழந்தைக்கு மருத்துவ முதலுதவி அளிக்க விரைந்தது. பின்னர் அந்த குழந்தைக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்ட நிலையில், காயம் பெரிய அளவில் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
Also Read
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?