Sports
'வாயை மூடிக்கிட்டு நில்லு"... சீண்டிய பேர்ஸ்டோ.. சீறிய விராட்கோலி..! என்ன நடந்தது ?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களை குவித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரரான பேர்ஸ்டோ பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இந்திய அணி வீரரான விராட் கோலி வேகமாக பேர்ஸ்டோவை நோக்கிச் சென்று கடுமையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது ஆட்டத்தின் 31.1 ஓவரின்போது இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளுடன் ஆடி வந்தது. களத்தில் இங்கிலாந்து வீரர்களான பேர்ஸ்டோ மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆடினர். அந்த சமயத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பேர்ஸ்டோ, கோலியிடம் ஏதோ ஆவேசமாக வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த விராட் கோலி பேர்ஸ்டோவை நோக்கி சென்றபோது, விராட் கோலியிடம், தோளில் தட்டி பீல்டிங் செய்யுங்கள் என்பது போல பேர்ஸ்டோ சைகை காட்டினார். இதையடுத்து பேர்ஸ்டோவுக்கு மூக்கறுப்பு தரும் விதமாக, முதலில் நீங்கள் சென்று பேட்டிங் செய்யுங்கள் என்றார். மேலும் பீல்டிங் செய்ய சென்ற விராட்கோலி மீண்டும் பேர்ஸ்டோவை பார்த்து வாயை மூடிக்கொண்டு பேட்டிங் செய் என்றார்.
இதையடுத்து நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!