Sports

SLvsAus டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபரீதம்- மைதான கூரை சரிந்து விழுந்ததால் அதிர்ச்சி!

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள்,2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆடிய இலங்கை அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை தரப்பில், அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 59 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக வீசிய நாதன் லயான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல ஸ்வப்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, தற்போதைய நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் குவிந்திருந்த நிலையில் மழை பெய்து ஆட்டம் பாதிக்கப்பட்டது. அந்த நிலையில் அதிக மழை பெய்ததால் மைதானத்தில் மூடப்பட்ட தார்ப்பாய் மீது தண்ணீர் தேங்கி நின்றது.

அப்போது, பலத்த காற்றினால் மைதானத்தில் இருந்த கேலரி ஒருபுறம் சரிந்து விழுந்தது. மற்றொரு புறம் பெவிலியன் அருகே இருந்த கண்ணாடி மொத்தமாக உடைந்து விழுந்தது. இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன் பின்னர் மழை நின்ற நிலையில், மைதானத்தில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அணியை விட ஆஸ்திரேலிய அணி 101 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாம் நாள் போட்டி நடைபெறவுள்ளது.

Also Read: ‘OPS அண்ணே நீங்க ஒருங்கிணைப்பாளர் இல்ல.. எந்த அதிகாரமும் இல்ல’ : EPS கடிதம்.. உச்சகட்டத்தில் அதிமுக மோதல்