Sports
CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்... 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த வீராங்கனை..! #SportsUpdates
1. பி.வி.சிந்து வெற்றி!
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்து பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் ஜயர்ஸ்பெல்ட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த போட்டியில், அவர் சீனாவின் நெஸ்லியான் இஜிட்டை எதிர்கொள்ள உள்ளார்.
2. மொயீன் அலி விளையாடுவாரா?
சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி இந்தியா வருவதற்கு விசா கிடைக்காமல் இருந்தது, இதனால் மொயீன் அலி சென்னை அணிக்காக விளையாடுவாரா என்ற குழப்பம் நிலவியது. இந்நிலையில் மொயீன் அலிக்கு விசா கிடைத்துவிட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா வந்த உடன் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பஞ்சாப் அணியை மட்டம் தட்டும் கவாஸ்கர்!
பஞ்சாப் அணியை மட்டம் தட்டும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். பஞ்சாப் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வீரர்கள் யாரும் இல்லை. பஞ்சாப் அணியின் மீது எந்த பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை. ஆனால் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது மிகவும் கடினம். முதலில் அணியாக பஞ்சாப் அணி வெல்லும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
4. மீண்டும் இணைந்துள்ளார் அடா ஹெகர்பெர்க்!
பெண்கள் விளையாட்டில் மிகச்சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் முன்னாள் பலோன் டி'ஓர் வெற்றியாளரான அடா ஹெகர்பெர்க். இவர் நார்வேயில் பெண் வீரர்களுக்கு மரியாதை இல்லாததால் தேசிய அணிக்காக விளையாடுவதை நிறுத்தினார். ஜனவரி 2020 மற்றும் அக்டோபர் 2021 க்கு இடையில் ஹெகர்பெர்க் காயம் காரணமாக 20 மாதங்கள் கழித்தார். தற்போது ஐந்தாண்டுகளுக்கு பின்னர் உலக கோப்பை தகுதி சுற்று போட்டிக்காக நார்வே அணியில் மீண்டும் இணைந்துள்ளார் அடா ஹெகர்பெர்க்.
5. கெத்தாக போஸ் கொடுத்துள்ள மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ் தான். இதுவரை ஐந்து முறை கோப்பைகளை வென்றுள்ளனர். மார்ச் 26ஆம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் இதுவரை மும்பை அணி வென்றுள்ள ஐந்து கோப்பைகளின் முன்பு நின்று கெத்தாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!