Sports
#Olympics - இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் வீராங்கனை லவ்லினா!
69 கிலோ எடைப்பிரிவான வெல்டர் வெயிட் பிரிவில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியிருந்தார் லவ்லினா. முதல் சுற்றில் இவர் எதிர்த்து ஆட வேண்டிய வீராங்கனை ஒலிம்பிக்கிலிருந்து விலகியதால் நேரடியாக அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெறும் வகையில் பை (bye) வழங்கப்பட்டது.
காலிறுதிக்கு முந்தைய அந்த சுற்றில் ஜெர்மானிய வீராங்கனையான நதீம் அபெட்சை எதிர்கொண்டார் லவ்லினா. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிய லவ்லினா நதீம் அபெட்சை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதி போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டாலே பதக்கம் உறுதி என்ற நிலையில், பலத்த எதிர்பார்ப்புடன் காலிறுதி போட்டி தொடங்கியது.
காலிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனையான நியன் ஜின் ஜேனை எதிர்கொண்டார் லவ்லினா. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையிலேயே மிகச்சிறப்பாக ஆடிய லவ்லினா ஜின் ஜேனை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி பேட்டியில், லல்லினா போர்கோஹெய்னுக்கும் துருக்கி வீராங்கனைக்குமான ஆட்டம் தொடங்கியது.. அதிரடியாக அடி, துருக்கி வீராங்கனை வெற்றிபெற்றார். ஐந்து நடுவர்களின் தீர்ப்புப்படி துருக்கி வீராங்கனை 30 புள்ளிகளும், லவ்லினா 25 புள்ளிகளும் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார் லவ்லினா.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!