Sports
இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று : ரிஷப் பண்ட் காரணமா?
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இங்கிலாந்து சென்றுள்ளனர்.
பின்னர், இந்திய வீரர்களை தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது இங்கிலாந்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதால் இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த இரண்டு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற வீரர்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா தொற்று எந்த இந்திய வீரருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ரிஷப் பண்ட் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் தனிமையில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மீண்டும் ரிஷ்ப் பண்டுக்கு வரும் ஞாயிறு கொரோனா சோதனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறுமா அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!