Sports

3வது முறையாக ஒலிம்பிக்கில் களம் இறங்கும் ரோஜர் பெடரர்.. தங்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் சுவிட்சர்லாந்து நாட்டின் சார்பாக விளையாடுகிறார்.

ஏற்கனவே ரோஜர் பெடரர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். 2008ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வாவ்ரிங்காவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார்.

இதையடுத்து 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவிடம் இறுதிப் போட்டியில் போராடித் தோற்று, வெள்ளிப் பதக்கம் வென்றார் ரோஜர் பெடரர். மேலும் 2016 ரியோடி ஜெனிரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் காயம் காரணமாக ரோஜர் பெடரர் பங்கேற்கவில்லை. தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் ரோஜர் பெடரர் பங்கேற்கிறார்.

தற்போது ரோஜர் பெடரர் விம்பிள்டன் தொடரில் ஆடிவருகிறார். ஒலிம்பிக் முடியும் போது ரோஜர் பெடரர் 40வது வயதை எட்டியிருப்பார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து 116 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இது சுவிட்சர்லாந்து வீரர்கள் அதிகம் பேர் கலந்து கொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டியாகும். கடைசியாக ரியோ ஒலிம்பிக்கில் 105 வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: #IPL2022- 74 போட்டிகள்.. புதிதாக 2 அணிகள் : அதிரடி மாற்றங்களை செய்த BCCI!