Sports
ரூ.75 கோடி மதிப்புள்ள “BUGATTI” காரை வாங்கிய கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ!
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் கிரிஸ்டியானோ ரொனால்டோ 75 கோடி ரூபாய் மதிப்புள்ள புகாட்டி லா வாய்டூர் நொய்ர் (Bugatti La Voiture Noire) என்ற காரை வாங்கியுள்ளார்.
இத்தாலியக் கால்பந்தாட்ட கிளப்பான ஜுவெண்டஸுக்காக விளையாடி வரும் ரொனால்டோ, சமீபத்தில் அந்த அணி வென்ற 36வது சீரிஸ் ஏ சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இந்த காரை அவருக்கே அவர் பரிசளித்துள்ளார்.
இந்த புதிய கார் வாங்கிய செய்தியை ரொனால்டோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எந்த வியூவ் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ரொனால்டோ பகிர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தில் அவருடைய இனிஷியலான சிஆர்7 அச்சிடப்பட்டிருக்கிறது.
ரொனால்டோ தற்போது வாங்கியிருக்கும் இந்த புகாட்டி கார் மணிக்கு 380 கிமீ வேகத்தில் போகும். புகாட்டி நிறுவனம் ரொனால்டோவுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் புகாட்டியும் நைக் (Nike) நிறுவனமும் இணைந்து ரொனால்டோவுக்கு ஒரு புதிய ஷூ ஒன்றை வடிவமைத்து தந்தது. அதன் பெயர் ‘நைக் மெர்குரியல் சூப்பர் ஃபிளை சிஆர் 7 டெய்ஸி.
35 வயதாகும் ரொனால்டோ பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். அவர் கார் கராஜில் வைத்திருக்கும் கார்களின் மதிப்பே 264 கோடி ரூபாயைத் தாண்டும். அவரிடம் ஃபெரார் 590 ஜிடிஓ, லம்போர்கினி அவெண்டோர், மெக்லாரன் எம்பி 4 12சி உள்ளிட்ட பல கார்கள் உள்ளன.
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?