Sports
“என்னை விமர்சிக்கலாம்; ஆனா, குடும்பத்தை இழுக்காதீங்க” : ரோஹித் சர்மா வேதனை!
2019-ம் ஆண்டில் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 2,442 ரன்கள் குவித்து அசத்திய ரோஹித் சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில், தனிப்பட்ட முறையில் குடும்பத்தினர் குறித்துப் பேசுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார் ரோஹித்.
அந்த நேர்காணலில் பேசிய ரோஹித் சர்மா, “கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டாக இருந்தாலும் நம்மைச் சுற்றி நிறைய சத்தங்கள் இருக்கும். அவை நம் கவனத்தை சிதறடிக்கும். இதனைத் தடுக்க நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்துக்கொண்டு அது நம்மைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
ரிஷப் பண்ட்டிடம் நான் இந்த அறிவுரையைத்தான் கூறினேன். 21 வயதில் அவருக்கு நிறைய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இறங்கும்போதெல்லாம் சதம் அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர் மீது திணிக்கப்படுகிறது. ‘இதைச் செய்; அதைச் செய்’ என்று அவருக்கு ஏராளமானோர் அறிவுரைகளை வழங்குகிறார்கள்.
நான் அவரிடம், உன்னைச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிக்கொள், யாரும் அதற்குள் உள்ளே வர முடியாதவாறு உறுதி செய், அதுதான் உன் பாதுகாப்பு இல்லம். மக்கள் உன்னைப் பற்றி பேசுவது வெளியே இருக்கட்டும். அந்தச் சுவற்றினுள்ளே நீ உன் வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்றேன். இந்த அறிவுரை ரிஷப் பண்ட்டுக்கு உதவினாலும் உதவலாம். ஆனால், இது எனக்கு உதவியது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகக்கோப்பையின் போது இந்திய அணியின் மூத்த வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறி தங்கள் குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தங்கியிருந்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த விமர்சனத்திற்கு ரோஹித் சர்மா எதிர்வினையாற்றியுள்ளார்.ரோஹி
“எங்களுக்கு ஆதரவாக எங்கள் குடும்பத்தினர் இருக்கின்றனர். நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர். இதைப் பற்றி விமர்சித்தபோது நான் உண்மையில் சிரித்தேன்.
ஆனால், நீண்ட நாட்கள் இங்கிலாந்தில் அனுமதியை மீறித் தங்கியதாக எழுதிக்கொண்டே இருந்தார்கள், ஒருகட்டத்தில் என் குடும்பத்தினரையும் இழுத்தனர். இது சரியல்ல. என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் என் குடும்பத்தை இழுப்பது முறையாகாது. விராட் கோலி கூட குடும்பம் பற்றி நான் உணர்வதைத்தான் உணர்வார் என்று கருதுகிறேன்” என வருத்தப்பட்டுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!