Sports
தமிழ் நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே!
கர்நாடகாவை சேர்ந்த மணிஷ் பாண்டே, இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் மணிஷ் பாண்டே, திரைப்பட நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஷ்ரிதா ஷெட்டி மற்றும் மணிஷ் பாண்டே இருவருக்கும் வரும் டிசம்பர் 2ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் NH4, இந்திரஜித், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!