Sports
மீண்டும் இதுபோல் நடந்தால் தடை : கோலியை கண்டித்த ஐ.சி.சி!
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் 5வது ஓவரில் ரன் எடுக்க ஓடும்போது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஹெண்ட்ரிக்ஸ்ஸின் தோள்பட்டையில் விராட் கோலி இடித்து விட்டு செல்வார். இந்த சம்பவம் குறித்து ஐ.சி.சி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
“விராட் கோலி ஐ.சி.சி வீரர்கள் ஒழுங்கு நடத்தை விதிகளை மீறியுள்ளார். அதாவது ஆட்டத்தின் போது எதிரணி வீரர்களுடனோ நடுவர்களுடனோ தேவையின்றி உடல் ரீதியாக உடல் ரீதியாக தொடக்கூடாது என்ற விதியை மீறியுள்ளார். இதை கோலியும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே அவருக்கு ஒரு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளியையும் அளித்துள்ளது'' என ஐ.சி.சி தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலி தென் ஆப்பிரிக்காவில் ஒருமுறை, உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருமுறை, தற்போது மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெங்களூரில் என்று மூன்று முறை ஒழுங்கு நடத்தையை மீறியதால் 3 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், கோலி அடுத்த 14 மாதங்களுக்குள் மீண்டும் வீதிமீறலில் ஈடுபட்டால்,அவரை ஓரிரு போட்டிகளுக்குத் தடை செய்ய வாய்ப்பு ஏற்படும்.
Also Read
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சாத்தான் வேதம் ஓதும் அமித்ஷா; ஊழலைப் பற்றி என்ன அருகதை இருக்கிறது? : செல்வப்பெருந்தகை கண்டனம்!
-
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?
-
வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளும் தமிழிசை.. அன்று பால்.. இன்று HCL.. கலாய்க்கும் இணையவாசிகள் - விவரம்!