Sports
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஹசிம் ஆம்லா திடீர் ஒய்வு!
தென்னாப்பிரிக்க அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வந்த ஆம்லா. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் இவர் மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளார். மேலும், கடந்த காலங்களில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கின் தூணாக செயல்பட்டு வந்துள்ளார். ஹசிம் அம்லா 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் ரன்னை குறைந்த போட்டிகளில் கடந்து சாதனை புரிந்தவர்.
சமீபகாலமாக அவரது பார்ம் கவலைக்குரிய வகையிலே இருந்தது. உலகக்கோப்பையில் அம்லா 7 இன்னிங்சில் ஆடி 203 ரன்கள் மட்டுமே குவித்தார். அப்போதே அவரது ஒய்வு குறித்த கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
124 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் 28 சதங்களுடன் 9,282 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 181 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்ற ஆம்லா 27 சதங்களுடன் 8,113 ரன்கள் குவித்துள்ளார்.
Also Read
-
பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்குவது மக்கள் விரோத முடிவு : பெ.சண்முகம் கண்டனம்!
-
தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!