Sports
குருவை மிஞ்சிய சிஷ்யன் - நேற்றைய போட்டியில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் !
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் சஹர் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அதேபோல் பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 65 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்திய அணி 27 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்த நிலையில், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ரிஷப் பந்த் 65 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 65 ரன்கள் அடித்ததன் மூலம் T20 போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிக ரன்கள் அடித்திருந்த தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார். முன்னதாக தோனி 2017ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக 56 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை(08.07.2019) தொடங்குகிறது.
Also Read
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!