Sports

#IndvNZ மழையால் தடைபட்ட போட்டி இன்று என்ன ஆகும்? ரிசர்வ்டே என்றால் என்ன? வெற்றி யாருக்கு?

இந்தியா - நியூசிலாந்து மோதிய அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று தடை பட்டது. இதனால் போட்டி இன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தான் ரிசர்வ் டே போட்டி என்று குறிப்பிடப்படுகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நாக் அவுட் போட்டி ஒன்று மழை காரணமாக அடுத்த நாளுக்கு ( ரிசர்வ் டே) ஒத்திவைக்கப்பட்டுள்ளது இதல் முதல் முறை.

நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்திருந்தது. ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லேத்தம் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து இன்று போட்டி மீண்டும் தொடங்கும். இன்றும் மழை குறுக்கிட்டால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்படும். போட்டி முடிவுக்கு வர இந்தியா இன்று 20 ஓவர்களையாவது பேட் செய்ய வேண்டும். ஒருவேளை 20 ஓவர்கள் கூட விளையாட முடியாதபடி மழை குறுக்கிட்டால், ஆட்டம் ரத்து செய்யப்படும்.

இந்திய அணி லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை விட அதிக புள்ளிகள் பெற்றிருப்பதால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்.

ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால், சூப்பர் ஓவர் நடத்தப்படும். போட்டி நடைபெறும் மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபர்டு மைதானத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என வானிலை கணிப்புகள் கூறுகின்றன. இதனால் இன்றைய போட்டியும் முழுமையாக நடைபெறுமா என்பதில் சந்தேகமே!.