Sports

இந்த மேட்சில் கோபப்பட்டால், கோலிக்கு என்ன ஆகும் தெரியுமா ? : ஐ.சி.சி விதிமுறையால் சிக்கல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமான விளையாடுபவர். அவருக்கு கோபம் என்று வந்தால் யாரிடம் அதை காட்டுவார் என்றே தெரியாது. விராட் கோலியின் ரசிகர்கள், கோலி களத்தில் காட்டும் ஆக்ரோஷம் காரணமாக எங்களுக்கு அவரை பிடிக்கும் என்பது ரசிகர்கள் ஸ்டேட்மெண்ட்.

இந்நிலையில், கோலியின் இந்த ஆக்ரோஷமே அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. அவரின் ஆக்ரோஷம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் மிகவும் அமைதியாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஐ.சி.சி சில புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. அதில் வீரர்கள் நடுவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்தியா ஆப்கானிஸ்தான் இடையில் நடந்த போட்டியில் 29வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால், அதற்கு நடுவர் அலீம் தார் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் கோலி நடுவரிடம் முறையீட்டார். நடுவரிடம் முறையிட்டதன் மூலம் ஐ.சி.சி விதி எண் 2.1ஐ கோலி மீறியதாக கூறி அவருக்கு 25% வருமானம் பிடிக்கப்பட்டு அவரின் மெரிட் புக்கில், ஒரு டீ மெரிட் புள்ளி (கருப்பு புள்ளிகள்) வைக்கப்பட்டது.

இதேபோல், வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஷமி வீசிய பந்தில் ஷாகிப் அல் ஹசனிற்கு கோலி எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். ஆனால், நடுவர்கள் விக்கெட் கொடுக்கவில்லை. இதையடுத்து கோலி ரிவ்யூ கேட்டார். ரிவ்யூவில் அவுட் இல்லை என வந்தது. இதையடுத்து கோலி நடுவரிடம் வாதம் செய்தார். ஆனால் கோலியை இதற்காக ஐசிசி தண்டிக்கவில்லை. அவரை ஐ.சி.சி வார்னிங் மட்டுமே செய்தது.

கோலி இன்னும் இரண்டு டி மெரிட் புள்ளிகளை பெற்றால் வரிசையாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது. பெரிய தவறுகளை களத்தில் செய்தால் ஒரே நேரத்தில் இரண்டு டி மெரிட் புள்ளிகள் வழங்கப்படும். இதனால் இன்று கோலி மிகவும் கவனமாக ஆட வேண்டும். ஏனவே, இன்று மட்டும் கோலி தவறு செய்தால் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.