Sports
உலகக் கோப்பை 2019: முதல் பந்திலேயே வரலாறு படைத்தார் இம்ரான் தாஹிர்!
உலகக் கோப்பை 2019 தொடரின் முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார் தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாஹிர்.
இங்கிலாந்து உடனான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இதன் மூலம் உலகக் கோப்பையில், தொடரின் முதல் பந்தை வீசிய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுக்கு உரியவராகியுள்ளார் இம்ரான் தாஹிர்.
1975-ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பை தொடரின் முதல் பந்தை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் மதன்லால் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பந்தை வீசி வரலாறு படைத்த கையோடு இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்து வீரர் பார்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார் தாஹிர். பிறகு என்ன சாதனைக்கும் விக்கெட்டுக்கும் சேர்த்து தனது ஸ்டைலில் மைதானத்தை வட்டமடித்து கொண்டாடினார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!