Sports
IPL 2019 : தொடர் தோல்விகளில் இருந்து மீண்டெழுமா ஐதராபாத் அணி ?
ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஹைதராபாத்தில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி அணி, இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை சி.எஸ்.கே உறுதி செய்யும்.
ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில், புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்துக்கொண்டே உள்ளது. தவிர, கடந்த நான்கு ஆண்டுகால ஐபிஎல்., தொடரில், முதல் முறையாக அடுத்ததடுத்து சொந்தமண்ணில் நடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை துவக்கத்தில் பலமாக இருந்தாலும், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட முயற்சிக்க வேண்டும்.
ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 10 முறை மோதியுள்ளது. அதில் சென்னை அணி அதிகபட்சமாக 8 முறை வென்றுள்ளது. ஹைதராபாத் அணி 2 முறை வென்றுள்ளது. இன்றைய போட்டி சொந்த மண்ணில் நடப்பது ஹைதராபாத் அணிக்கு சாதகமான விஷயம்.
Also Read
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!