Sports
IPL 2019 : சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா?
ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றிரவு நடக்கும் ஜெய்ப்பூர் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.சென்னை அணியின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் , ஹர்பஜன்சிங், ரவிந்திர ஜடேஜா ஆகிய 3 பேரும் சேர்ந்து 21 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் நல்ல பார்மில் உள்ளார்.
பேட்டிங்கில் கேப்டன் டோனி,கேதர் ஜாதவ், டுபெலிசிஸ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். ரெய்னா, வாட்சன், அம்பதி ராயுடு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமானது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. சென்னையிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் பட்லர் , சுமித் , சாம்சன் ஆகியோரும், பந்து வீச்சில் ஷ்ரேயாஸ் கோபால் , பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர்.
சேப்பாக்கத்தில் அந்த அணி சூப்பர் கிங்சிடம் வெற்றி அருகே வந்து வாய்ப்பை தவறவிட்டது. தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் சென்னையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு கூடுதல் பலமே.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!