Sports
IPL 2019;வெற்றியை தொடருமா மும்பை இந்தியன்ஸ் MIvsSRH
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஹைதராபாத்தில் நடக்கும் 19வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 12 முறை மோதியுள்ளது. அதில் ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 7 முறை வென்றுள்ளது. மும்பை அணி 5 முறை வென்றுள்ளது. இன்றைய போட்டி சொந்த மண்ணில் நடப்பது ஹைதராபாத் அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.
மும்பை அணியை, பொறுத்த வரையில், பங்கேற்ற 4 போட்டியில் 2ல் வெற்றி பெற்றது.மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே ஆட்டத்திறனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.லசித் மலிங்கா தனது தாய் நாட்டில் நடந்துவரும் உள்ளூர் ஒருநாள் தொடரில் பங்கேற்க சென்று விட்டதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்க மாட்டார்.
உத்தேச அணி : ரோகித் சர்மா (கேப்டன்), டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, குருநால் பாண்டியா, கீரன் பொல்லார்ட், மிட்செல் மெக்லகன், ஜெஸன் பெஹாரன்ஆஃப், ஜாஸ்பிரிட் பூம்ரா, ராகுல் சகார்/மயான்க் மார்கண்டே.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது. இதன்மூலம் புள்ளி அட்டவனையில் முதலிடத்தை பிடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதனை தக்கவைத்துக் கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற வேண்டும்.
உத்தேச அணி : டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹேடா, யுஸப் பதான், ரஷீத் கான், முகமது நபி, புவனேஸ்வர் குமார்(கேப்டன்), சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!