Politics
“இந்த அத்துமீறலை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது!” : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் நிலவும் த.வெ.க.வின் தோல்வி ஆட்சி நிர்வாகம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி பதிலளித்தார்."
அவர் தெரிவித்ததாவது,
“கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ.வின் தகாத செயலை மூடி மறைக்க திட்டமிட்டு வருகிறார்கள். தேசிய மகளிர் ஆணையமே இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. நிச்சயமாக கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
காவல்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சரைத் தவிர, வேறு யாருக்கும் காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்துவதற்கு உரிமை இல்லை. இதுவே, மிகப்பெரிய சட்ட மீறல். இந்த அத்துமீறலை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் பல கோயில்களை கட்டியெழுப்பியிருக்கும் அரசர்கள் கூட, தங்களை கடவுளாக நினைத்து மற்றவர்கள் போற்றவேண்டும் என நினைத்தது கிடையாது.
கடவுள் நம்பிக்கையற்ற தலைவர் கலைஞரின் ஆட்சியில்கூட, கடவுளுக்கு நிகராக யாரையும் போற்றியது கிடையாது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டபோதுகூட இதுபோன்ற செயல்கள் நடைபெறவில்லை.
இது கடவுள் மீது நம்பிக்கை இருக்கும் அனைவரையும் புண்படுத்தக்கூடிய மிகத்தவறான செயல்.
த.வெ.க ஆட்சியில் அனைத்திற்கும் வழக்குப்பதிவு செய்கிறார்கள். தற்போது, இலட்சக்கணக்கோரின் மனத்தை புண்படுத்தியிருப்பவர்கள் மீது என்ன வழக்குப்போடப் போகிறார்கள்?
த.வெ.க.வை விமர்சிப்பதற்காக தி.மு.க.வினர் மீது தொடர்ந்து விசாரணைகளும், வழக்குப்பதிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இதனைக் கண்டு தி.மு.க என்றும் பின்வாங்காது.
மேகதாது விவகாரத்தில் விஜய் வாய்திறக்கவில்லை. இதுவரை விஜய் எதற்குதான் கருத்து தெரிவித்துள்ளார்? தமிழ்நாட்டில் எதற்குமே கருத்து தெரிவிக்காத முதலமைச்சர் எப்படி நீடிக்க முடியும்?
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கினாலும், நியாயமான தொகுதி மறுவரையறை (Fair Delimitation) என்பதுதான் எங்கள் (தி.மு.க) நிலைப்பாடு. ”
Also Read
-
“ஒன்றிய அரசின் வாயைப்பார்த்து உட்கார்ந்திருக்கும் பட்டுவேட்டி பண்ணையார் அரசு” : DMK Youth Wing விமர்சனம்!
-
“காவிரி விவகாரம் பற்றி முதலமைச்சர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்!
-
குறுக்கு வழியில் ஓப்பன் டெண்டர் : த.வெ.க அரசின் ஊழல் ஒழிப்பு லட்சணம் இதுதான்? - பகீர் கிளப்பும் தகவல்கள்!
-
“நம் மண்ணில் வ.உ.சி பதித்த கொள்கைத் தடம் என்றும் அழியாது!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“மருந்தும் மதுவும் ஒரே கூரையில்... த.வெ.க.வின் புதிய சுகாதாரக் கொள்கை!” : தி.மு.க கடும் கண்டனம்!