Politics
விலைவாசி உயர்வில் முதலிடம்... மக்களை காக்கத் தவறிய த.வெ.க அரசு!
தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சில்லறைப் பணவீக்கம் அக்டோபர் மாத்தில் 7.29 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது, தேசிய சராசரியான 6.09 சதவீதத்தை விட அதிகம்.
சில்லறை பணவீக்கம் 7.29 சதவீதமாக உயர்ந்திருப்பது வெறும் பொருளாதாரப் புள்ளி விவரம் மட்டுமல்ல; சாமானிய மக்களின் குடும்பச் செலவீனங்களப் பாதிக்கும் முக்கிய பிரச்சினை. காய்கறி முதல் மளிகைப் பொருட்கள் வரை கிடுகிடு விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் 7.26 சதவீதமும், ஆந்திரப்பிரதேசத்தில் 7.25 சதவீதமும் பணவீக்கம் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் 7.07 சதவீதமாகவும், கேரளாவில் 6.22 சதவீதமாகவும் உள்ளது.
நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் பணவீக்கம் 7.86 சதவீதமாக உள்ளது. இது தேசிய கிராமப்புற சராசரியான 6.33 சதவீதத்தை விட அதிகம். அதேபோல், தமிழக நகர்ப்புறங்களில் பணவீக்கம் 6.84 சதவீதமாக உள்ளது.
தேசிய நகர்ப்புற சராசரி 5.41 சதவீதம் மட்டுமே. பணவீக்கம் 6 சதவீதம் என்ற ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பையும் தமிழ்நாடு தாண்டிவிட்டது. அதாவது, தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. நகரங்களை விட, கிராமப்புறங்களில் விலைவாசி இன்னும் கடுமையாக உயர்ந்து இருக்கிறது.
காய்கறிகள், வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் த.வெ.க அரசு தவறிவிட்டது. உழவர் சந்தைகள், கூட்டுறவு விற்பனை மையங்கள் முறையாகச் செயல்படவில்லை.
‘பதுக்கல் மற்றும் இடைத்தரகர்கள் மீது கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாங்கும் சக்தியைப் பாதுகாக்க த.வெ.க அரசு எந்தச் சிறப்புத் திட்டங்களையும் கொண்டு வரவில்லை. இதுவே, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம்' என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்… த.வெ.க அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம்.
Also Read
-
“இப்படி மாணவர்களை வதைத்தால்... எப்படி உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?” : தி.மு.க தலைவர் கண்டனம்!
-
“விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியாது! கேவலம்... மகா கேவலம்!” : முரசொலி தலையங்கம்!
-
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் ரூ 22.30 கோடி அரசு நிதி மாயம் : தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு
-
பதிலளிக்காமல் வதந்தி என்று மறுப்பது ஏன்? : நிர்மல்குமாருக்கு தி.மு.க மகளிர் அணி கேள்வி!
-
“டம்மி முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!