Politics
“இப்படி மாணவர்களை வதைத்தால்... எப்படி உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?” : தி.மு.க தலைவர் கண்டனம்!
தமிழ்நாட்டில் பல்வேறு சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்தி வந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயரை ஆட்சிக்கு வந்ததும், ‘சமூக நீதித்துறை’ என பெயர் மாற்றம் செய்த த.வெ.க அரசு, சமூக நீதியை உறுதிசெய்வதில் காழ்ப்புணர்வுடன் இயங்கி வருகிறது.
இதனைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
திராவிட மாடல் அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
Also Read
-
“விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியாது! கேவலம்... மகா கேவலம்!” : முரசொலி தலையங்கம்!
-
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் ரூ 22.30 கோடி அரசு நிதி மாயம் : தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு
-
பதிலளிக்காமல் வதந்தி என்று மறுப்பது ஏன்? : நிர்மல்குமாருக்கு தி.மு.க மகளிர் அணி கேள்வி!
-
“டம்மி முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
தவெக MLA-க்கள் கூட்டத்தில் தீபாவளி பரிசா? நடவடிக்கை எப்போது? எதற்கு இந்த நாடகம்? : திமுக சரமாரி கேள்வி!