Politics

“ICU-வில் சட்டம் - ஒழுங்கு.. கோமாவில் ஆட்சி நிர்வாகம்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக பண்டிகை நாளில் அரங்கேறிய கொலைச் சம்பவங்கள், தவெக எம்.எல்.ஏ-வும் துணை சபாநாயகருமான ரவிசங்கரோ குடிநீர் இல்லை என கோரிக்கை வைக்க வந்த சாமானியரை ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியது. மற்றொருபுறம் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் போன்ற அவலங்களை தமிழ்நாடு சந்தித்து வருகிறது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!

😳 ஒரே நாளில் 17 கொலைகள்!

😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!

😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,

குற்றவாளிகளுக்குப் பயமில்லை!

காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!

த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!

மொத்தத்தில்,

🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also Read: சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆட்டம்.. கட்டுப்படுத்துவாரா டம்மி CM? : உதயநிதி கேள்வி!