Politics
தவெக நிர்வாகி சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்.. அம்பலமான தூயசக்தி தவெக நாடகம்?
புதுக்கோட்டை த. வெ. க மாவட்ட அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி வி. ரம்யா ஆகியோருக்கு, ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தில் ஒருவர் நவம்பர் 6-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், மற்றொருவர் அடுத்த வாரம் விசாரணைக்காக ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2016 முதல் 2021 வரையிலான அதிமுக அரசில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பதவி வகித்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2021-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இதனை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதுதொடர்பாக 2024-ஆம் ஆண்டு நடந்த முதல் கட்ட விசாரணையில் விஜயபாஸ்கர் மற்றும் ரம்யா இருவரும் விசாரணைக்கு ஆஜரானபோது, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. தற்போது இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஊழலை ஒழிக்க வந்தவர்கள் நாங்கள் தான் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் தவெக-வின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக சி.விஜயபாஸ்கர் உள்ள நிலையில், அவரை விராலிமலை இடைத்தேர்தலிலும் தவெக வேட்பாளராக களமிறக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
தற்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மன் தொடர்பாக தவெக-வும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்குமா? அல்லது தூய சக்தி நாடகத்தை தொடருமா? என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
பறவைக் காய்ச்சல் பரவல்? : கடலூரில் 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழப்பு!
-
மன்னிப்புக்கேள்..! இதுதான் ஒழுக்கத்தைப் போதிக்கும் முறையா? : அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சுக்கு SFI கண்டனம்!
-
“இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவையே சிதைக்கும் முதலமைச்சர் விஜய்” : முரசொலி தலையங்கம் ஆவேசம்!
-
கையில் பனையூர் மூர்த்தி புகைப்பிடிப்பது.. First உங்க Tatoo-வ அழிச்சுட்டு வாங்க.. ஜெகதீஸ்வரிக்கு பதிலடி!
-
“மொட்டை அடிச்சுருங்க.. ஒருவரது தோற்றம்தான்..” - பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!