Politics
Inky Pinky Ponky போட்டு தப்பிக்கும் கைதிகள்.. ‘மெத்’ அரசின் மெத்தனப்போக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக சிறைக்கைதிகள் தப்பித்து ஓடுவது ஆளும் தவெக அரசின் சட்டம், ஒழுங்கு அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த வாரம் தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் ஒட்டுமொத்தமாக தப்பித்து தமிழ்நாட்டையே கதி கலங்க வைத்தனர் என்றால் மிகையல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கைதிகள் தப்பிப்பு நிகழ்வாக இது அமைந்தது.
இந்நிலையில் இன்று (அக்.31) மீண்டும் கோவை சிறைக் கைதி ஒருவர் தப்பித்து ஓடியது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“துப்பில்லாத ஆட்சியில் பெப்பர் ஸ்பிரேயாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்” : கனிமொழி எம்.பி. விமர்சனம்!
-
த.வெ.க ஆட்சி பாசிச ஆட்சிதான் ; விஜய் ஒன்றும் அப்பாவி அல்ல - முரசொலி தலையங்கம் கடும் சாடல்!
-
“கொள்கைத் தடமும் தொண்டறமும் என்றும் நமக்கு வழிகாட்டும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
கைது செய்ய வந்த கேரள போலீஸ்: நெஞ்சு வலி என்று நாடகமாடிய BLM பிரேம்குமார் - நடந்தது என்ன?
-
CBSE-க்கு முன்னுரிமை... நீட் தேர்வே ஒரு பெரிய மோசடி : அதிகாரப்பூர்வமாக வெளியான பகீர் தகவல்!