Politics
“1995-க்குப் பிறகு தவெக அரசில்.. Breaking Bad-ஐ தொடர்ந்து Prison Break” : மு.க.ஸ்டாலின் காட்டம்!
தேனி மாவட்ட சிறைச்சாலையில் நேற்று (அக்.26) 17 கைதிகள் தப்பியோடியது தமிழ்நாட்டையே உலுக்கும் செய்தியாக அமைந்தது. குற்றம் செய்தவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் அந்த சிறையிலிருந்தே குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை தவெக ஆட்சியில் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் புழல் சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பியதே அதிர்ச்சியளித்த நிலையில், அடுத்தடுத்து சிறைக்கைதிகள் தப்புவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது, என தெரிவித்துள்ளார்.
Also Read
-
த.வெ.க அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது ; அன்பில் மகேஸ் கைது - மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!
-
தவெக ஆட்சியில் சீரழிந்த சட்டம் ஒழுங்கு.. மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.. களமிறங்கும் திமுக மகளிரணி!
-
“தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“நாளிதழ்களில் கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு கொலைகள்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
-
நாளுக்கு நாள் சீரழியும் சட்டம் ஒழுங்கு.. தாய்மாமா விஜய் எங்கே போனார், என்ன ஆனார்?: கனிமொழி எம்.பி கேள்வி!