தமிழ்நாடு

“தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

த.வெ.க அரசை கண்டித்து அக்.31 ஆம் தேதி தி.மு.க மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தினமும் கொலைகள் அரங்கேறி வருகின்றன. நாளிதழ்களைப் புரட்டினால் ஒரு நாளைக்கு 10 கொலைகளுக்கும் மேல் செய்திகளாக இடம் பெறுகின்றன.

த.வெ.க ஆட்சியில் சாதனைகளைக் காட்டும் கொலைகள்தான் நாளிதழ்களின் முதற்பக்கத்தில் வருகின்றன. அதோடு, த.வெ.க நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் கைதாவது இன்னும் மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதைவிடக் கொடூரம் என்னவென்றால், த.வெ.க நிர்வாகிகளே உயர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருப்பதும், அது குறித்து முதலமைச்சர் விஜய் மௌனமாக இருப்பதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், ஒரே மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மாயமாகியிருக்கிறார்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்ற ஐயம் பொதுமக்களுக்கே ஏற்படுகிறது.

இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ” பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்,சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.

மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.

வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.

த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.

சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக். 31) தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories