Politics
“அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்.. எங்கே போனார் விஜய் மாமா?” : கனிமொழி எம்.பி சுளீர் கேள்வி!
தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மக்கள் கடும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து குழந்தைகள் மாயமாகும் சம்பவத்தால் பெற்றோர் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக குழந்தைகள் கானாமல் போவது தொடர் கதையாகி வரும் நிலையில், தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்களோ மக்கள் மீது அக்கறை இல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு தவெக அரசு காரணம் இல்லை என சப்பைக் கட்டு கட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை.
வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது.
சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார் .
மறுபுறம், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
‘துப்பாக்கி ஹீரோ’ இல்லை குற்றங்களைத் தடுக்கத் ‘துப்பில்லாத ஹீரோ’ விஜய் : மு.க.ஸ்டாலின் காட்டம்!
-
தமிழ்நாட்டில் ‘உண்மையான தீயசக்தி’ யார் என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்! : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னை ரேடாரில் தொழில்நுட்பக் கோளாறு : நிகழ்நேர மழை நிலவரத்தை கண்காணிப்பதில் சிக்கல்!
-
பிரபல சமையல் கலைஞர், பத்மஸ்ரீ தாமு (72) மறைவு!
-
ரேஷன் அரிசிக்கு பாலிஷ் போட்டு கொள்ளை அடிக்கும் தவெக அரசு.. இதுவா Dummy CM சொன்ன மாற்றம்?: உதயநிதி கேள்வி!