Politics
தவெக அரசின் தீண்டாமையா? தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் சமையலர் பணி இல்லை என பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி, தகடி கிராமத்தில் வசித்து வருபவர் தேவி பாலா. அதே கிராமத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்ட சமையலர் பணிக்காக இவர் விண்ணப்பித்துள்ளார். அதற்கான நேர்காணலும் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்று, அதில் அவர் தேர்வு பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (அக்.18) மாவட்ட திட்ட அதிகாரி தேர்வு செய்யப்பட்ட பணி ஆணையை வழங்காமல் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேவி பாலா சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கேட்டபோது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு பணி வழங்கக் கூடாது என்று மாவட்ட அதிகாரி தெரிவித்ததாக தேவி பாலா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள் பொறுப்பு அமைச்சராக இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பணி ஆணை வழங்காமல் தடுக்கப்பட்டுள்ளதால் வேதனையுடன் இருப்பதாக தேவிபாலா தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரடி விசாரணை செய்தால் என்னைப் போல் பாதிக்கப்பட்ட நபர்கள் பலரின் விவரம் தெரியவரும். எனவே உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தமக்கு அந்த பணியை வழங்கிட வேண்டும் என்றும் தேவி பாலா வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“ஓரிரவில் கனமழையால் தேங்கிய நீர், விடிவதற்குள் வடிந்தது! திமுக அரசின் சாதனை இது!”: கே.என்.நேரு பெருமிதம்!
-
“இது தமிழக வெற்றிக் கழகமா? அல்லது Drugs வெற்றிக் கழகமா?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி
-
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
-
பத்திரிகையாளர்களுக்கு ‘கொ* மிரட்டல்’ விடுத்த த.வெ.க நகரச் செயலாளர் பால்ராஜ்! - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!