Politics
நாடே போராடும் நாளில் விருந்து அருந்திய விஜய் - ராகுல்! : இதுதான் தூய சக்தியா?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் ‘இந்தியா’வின் ஜனநாயக மாண்பையே சிதைக்கும் வகையில், SIR முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் இளைஞர்களும், இயக்கங்களும், எதிர்க்கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் போராடி வருகின்றனர்.
அவர்களது போராட்டம், இந்திய அரசியலைமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் வகையில் அமைந்திருப்பதால், அவர்களை தடுத்து நிறுத்தி, சிறைபிடித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பா.ஜ.க என்னும் டெல்லி எஜமானர்களின் மனத்தை குளிர்விக்க, தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை சிறைபிடித்து உண்மையான அடிமை என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது விஜய் தலைமையிலான த.வெ.க அரசு.
தேசிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் காவல்துறையால் அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலும், போராட்டம் குறித்தோ, ஜனநாயகத்தை காப்பது குறித்தோ எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விருந்து அளித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.
டெல்லியில் ஞானேஷ் குமார் பதவி விலகப் போராடுவதுபோல் போராடிவிட்டு, தமிழ்நாடு வந்ததும் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை கண்டுகொள்ளாமல் விஜய்யின் விருந்தை சிரிப்போடு ஏற்று, ரீல்ஸ் எடுக்க ராகுல் காந்தி மும்முரம் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மிகவும் பெருமைக்குரிய செய்தியாக, த.வெ.க.வினரும், காங்கிரசாரும் மாறி மாறி இணையத்தில் பதிவிட்டு வருவது, இளைஞர்களின் போராட்டத்தை மேலும் அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இப்படியான சூழலில், நாளை (அக்.11) சென்னையில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் ஒன்றாக மெட்ரோ பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
த.வெ.க ஆட்சியை தக்கவைக்க, பிரதமர் மோடியுடனும், ராகுல் காந்தியுடனும் நட்பு பாராட்டும் முதலமைச்சர் விஜய்க்கு, தேர்தல் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் மக்கள் குறித்து கவலை இல்லாதது, மாற்றம் தேடிய மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
Also Read
-
டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை நிரூபித்த விஜய் : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
-
இளைஞர்கள் மீது போர் தொடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு : டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை!
-
“பா.ஜ.க அரசின் நீட்சி த.வெ.க” : CJP-க்கு ஆதரவாகப் போராடிய இளைஞர்கள் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”தி.மு.க-வுக்குத் தோல்வியில் வெற்றி; த.வெ.க-வுக்கு வெற்றியில் தோல்வி” : மு.க.ஸ்டாலின் பேட்டி!
-
“தூயசக்தி விஜய் காலைச் சுற்றும் சொத்து வழக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?