Politics
தாராபுரத்தில் தவெக-வின் தில்லுமுல்லு?.. மூதாட்டியை விசில் சின்னத்தில் ஓட்டுப்போடச் சொன்ன அலுவலர்!
தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இன்று (அக்டோபர் 06) இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இரண்டு தொகுதிகளிலுமே தவெக-வினர் பணப்பட்டுவாடா செய்ததாகவும் பரிசுப் பொருட்கள் வழங்கியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற தாராபுரம் தொகுதியின் கொளிஞ்சவாடி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மூதாட்டி ஜெய்தீன் என்பவரை பணியில் இருந்த அலுவலர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக மூதாட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூதாட்டி ஜெய்தீன் அளித்த பேட்டியில், “நான் வாக்குச்சாவடிக்குள் சென்றதும் எந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்குச்சாவடிக்குள் இருந்த அலுவலர் கேட்டார். அதற்கு நான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் செலுத்த வேண்டும் என கூறினேன். அவர் விசில் சின்னத்தை அழுத்துங்கள் எனக் கூறினார். நான் அதைக் கேட்கவில்லை, உதயசூரியன் சின்னத்திற்கே வாக்குச் செலுத்தினேன்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் தங்கமணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தவெக-விற்கு ஆதரவாக தேர்தல் வாக்குச்சாவடி அலுவலரே செயல்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தலில் தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டுதான் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியுள்ளது. அதனால் தான் இந்த திணிக்கப்பட்ட இடைத்தேர்தலே நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் வாக்குக்காக இதுபோன்ற வேலைகளில் தேர்தல் அலுவலர்களே ஈடுபட்டுள்ளது மேலும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Also Read
-
அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிய வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் மனு!
-
“துறை செயலாளர் இல்லாமல் திண்டாடும் வேளாண் துறை” : தூங்குமூஞ்சி த.வெ.க அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
பாமாயில் விவகாரம் : “3 மாதத்தில் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்?” - தவெக அரசை அம்பலப்படுத்திய உதயநிதி!
-
தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது? : த.வெ.க அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி!
-
🔴LIVE UPDATES: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் - வாக்குச்சாவடியில் முறைகேடு செய்யும் தவெக!