Politics

தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. மிரட்டிய ரோடு ஷோ.. ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யா அவர்களை ஆதரித்து, பொள்ளாச்சி சாலை - பெரிய கடை வீதி வழியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரம்மாண்ட ரோடு ஷோ சென்றார்.

இந்த ரோடு ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையின் இருபுறமும் கூடி உற்சாக வரவேற்பை அளித்தனர்.

அக்டோபர் 6-ம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மதுராந்தகத்தில் திமுக வேட்பாளராக பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக எஸ்.சுகன்யா அவர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் இன்று (அக்.02) திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பெண்கள், தாய்மார்கள் என அனைவரும் முக மலர்ச்சியுடன் உற்சாக வரவேற்பை அளித்ததோடு திமுக 100 % வெற்றியைப் பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

ரோடு ஷோவின் போது அப்பகுதியில் உள்ள கடை வீதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் அங்குள்ள பொதுமக்களிடன் உரையாடி வாக்குச் சேகரித்தார். அப்போது தவெக ஆட்சியில் எகிறியுள்ள விலைவாசி உயர்வு குறித்து கடும் வேதனையும் அச்சமும் தெரிவித்தனர். தொடர்ந்து அன்றாடத் தேவைக்கு பயன்படுத்தும் அரிசி, காய்கறிகள் விலை உயர்வதால் மிகுந்த சிரமத்திற்கும் உள்ளாவதாகவும், திமுக ஆட்சியில் எங்களுக்கு இந்த நிலமை இல்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்தனர். தொடர்ந்து திமுக-வுக்கே எங்கள் வாக்குகளை செலுத்துவோம் என மக்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தொடர்ந்த ரோடு ஷோவில் மக்கள் வெள்ளத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் உற்சாக வரபேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் : புறக்கணிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்? - தவெக அரசின் பதிவில் வெளிவந்த உண்மை!