Politics

அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!

தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத வகையில் அரசாணைகளை வெளியிட்டு, உண்மை முகம் அம்பலப்பட்டதும் உடனடியாக திரும்பப்பெறும் நடவடிக்கைகளை த.வெ.க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

உரிமைப் போராட்டங்களில் முன்னின்று குரல் எழுப்பும் தமிழ்நாட்டில் இடதுசாரிகளுடன் இணைந்து மாணவர்கள் உரிமைப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பித்து, அதற்கு கண்டனம் எழுந்ததும் திரும்பப்பெற்றதுபோல்;

செய்யாறு மேல்மா கிராமத்தில் விவசாயிகளுக்கு எதிரான சிப்காட் தொழில் பூங்கா திட்டம் கொண்டு வர, நிலம் கையகப்படுத்துவதற்கு முதலில் உத்தரவு பிறப்பித்து, பிறகு அதனையும் திரும்பப்பெற்றது த.வெ.க அரசு.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாட்டில் சீர்கெட்டிருக்கும் சட்டம் - ஒழுங்கு விவகாரங்கள் குறித்து மக்களும், எதிர்க்கட்சிகளும் கேள்விக்கேட்பதைத் தடுக்க, தகவல் அறியும் சட்டத்திலிருந்து (RTI) சட்டம் - ஒழுங்கு தரவுகளுக்கு விலக்களித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, கண்டனங்கள் வலுத்ததும் அதனையும் விஜய் அரசு திரும்ப்பெற்றுள்ளது.

கண்டனங்கள் இல்லை என்றால் ஒளிவுமறைவான ஒடுக்குமுறை அரசியலை மேற்கொள்ளலாம்; கண்டனங்களுக்கு உள்ளானால் முகமூடி போட்டுக்கொண்டு பொய்யான தோற்றத்துடன் ஆட்சி நடத்தலாம் என்பதான கருத்தை முன்வைத்து ஆட்சி செய்து வருகிறது த.வெ.க அரசு.

இந்த உண்மை முகத்தை எதிர்க்கட்சிகள் தோலுரிக்கும் வேளையில், வன்மமாகவும், சத்தமாகவும் அவதூறு பரப்புவதை சற்றும் தயக்கமில்லாமல் ஆளும் த.வெ.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான த.வெ.க.வின் தகிடுதத்தம் தொடர்வதால், ஆளும் கட்சிக்கு மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

Also Read: 16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!