Politics
“இது யாருக்கான ஆட்சி? கேடுகெட்ட ஆட்சியை தவெக நடத்திக் கொண்டிருக்கிறது” : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
வண்டலூரி அருகே கண்டிகை பகுதியில் பள்ளிக்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே 10ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, மூச்சடைக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இன்று முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மதுராந்தகம் வருகிறார் என்பதற்காக, இந்தச் சம்பவத்தை பொய் செய்தி எனக் கூறி, மூடி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம்சாட்டும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை, இந்த தவெக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதைவிட, முதலமைச்சரின் வருகைக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதுதான் காவல்துறையின் முன்னுரிமை என்றால், உண்மையில் இது யாருக்கான ஆட்சி? எப்படி அந்தச் சிறுமிக்கு நீதி கிடைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
மாணவிக்கு பாலியல் தொல்லை : இதுதான் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? - DMK IT Wing கேள்வி!
-
வண்டலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. வாய்கிழிய பேசிய முதலமைச்சர் எங்கே? : உதயநிதி கண்டனம்!
-
கழிப்பறைக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி : வண்டலூர் அருகே நடந்த கொடூர சம்பவம்!
-
“சதிச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஞானேஷ்குமார் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது” : முரசொலி வலியுறுத்தல்!
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.