Politics
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
தமிழ்நாடு முழுவதும் தவெக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 4 மாதங்களாக மின்வெட்டால் தத்தளித்து வருகிறது. இது மாநிலம் முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்களையும் கடுமையாக பாதிப்பதோடு, ஏழை மக்கள் தூக்கமில்லாமலும் பள்ளிக் குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் இரவில் படிக்க முடியாமல் அல்லல்படும் சூழல் தான் நிலவுகிறது. இதோடு மட்டுமில்லாமல், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருமே பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த மின்வெட்டுக்கு சாட்சியாக தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்கள் வீதிகளில் வந்து போராடும் காட்சிகளே சாட்சி. குறிப்பாக தலைநகர் சென்னையில் தலைவிரித்தாடும் மின்வெட்டுக்கு இதுவரை நடவடிக்கை எடுத்தபாடில்லை.
மின்வெட்டுக்கு காரணமாக அமைச்சர்கள் கூறும் காரணமோ மக்களை மிகவும் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் மின்வெட்டு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, பஞ்சாபில் 14 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது என மடைமாற்றும் வகையில் பதிலை அளித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.
அமைச்சர் செங்கோட்டையனோ மற்ற மாநிலங்களோடு மின்வெட்டை ஒப்பிட்டும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா காற்று குறைந்துவிட்டதால் மின் உற்பத்தி குறைந்துவிட்டது என பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்களே தவிர தற்போது வரை மின்வெட்டுக்கு தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை.
இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என அனைவருமே கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தொடரும் மின்வெட்டு குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில், இந்திய வரைபடத்தை பகிர்ந்து அதில் அனைத்து மாநிலங்களும் இரவில் வெளிச்சத்தில் மின்னுவது போலும், தமிழ்நாடு மாநிலம் மட்டும் வரைபடத்தில் இருள் சூழ்ந்து இருப்பது போலவும் பகிர்ந்துள்ளார்.
எப்போதும் போல மடைமாற்றும் அரசியலைப் செய்துவரும் தவெக, மின்வெட்டிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு மடைமாற்றாமல், திராவிட மாடல் ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்ததுபோல மாற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.
Also Read
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!
-
“இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகிக்க ஞானேஷ் குமார் தகுதியற்றவர்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்.. ஆனால்.. செப். 27 ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.. நிதியமைச்சகம் அறிவிப்பு!
-
“Airport-ஐ தனியாருக்கு கொடுத்துடுங்க..”- TN Budget அன்றே மோடிக்கு கடிதம்.. கிழிந்த விஜயின் முகத்திரை!