Politics
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய்க்கு, தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “புதிய முதலீடுகளை ஈர்ப்பீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,
திராவிட மாடல் ஆட்சியில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டை படிப்படியாக தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான அடித்தளப் பணிகளை ஏற்கனவே செய்து வைத்துள்ளார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
உதாரணமாக,
காற்றாலை மின் உற்பத்தி: தமிழ்நாட்டின் காற்றாலை இயந்திர உற்பத்தியில் நமக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி புதிய முதலீடு குறித்து சில நிறுவனங்களுடன் திராவிட மாடல் அரசு பேசி முதலீடுகளை உத்தேசமாக உறுதிசெய்து வைத்துள்ளது. இலக்கு ரூ.10,000 கோடி.
Horse Powertrain நிறுவனம்: Renault-Geely நிறுவனங்களின் வழியே உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் நமது சென்னையில் Renault தொழிற்சாலையில் முதலீடு செய்ய 2025 முதலே பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.
ஒன்றிய அரசின் ஒரு அனுமதிக்காக காத்திருந்த அவர்களுக்கு கடந்த june மாதம் அது கிடைத்துவிட்டது என்று “Hybrid powertrains could be manufactured at Renault’s Chennai facility” என்று Autocar பத்திரிகை செய்திகள் கூறின. மேலும் இந்த sector-க்கு 2028-ல் இருக்குமதி வரிச்சவால் நெருங்குகிறது. எனவே ஒப்பந்தத்தை உடனே முடிக்க அவர்கள் தயாராக இருப்பார்கள். இலக்கு ரூ.4,000 கோடி.
Motherson & Wilson Power: ஏற்கனவே இவர்கள் சிறப்பான தமிழ்நாடு முதலீட்டாளர்கள். இதில் Motherson ஐரோப்பாவில் சில புதிய முயற்சிகள் எடுத்துவருகிறது. அடுத்தகட்ட விரிவாக்கத்தின் இலக்கு ரூ.15,000 கோடி.
Hinduja: தி.மு.க ஆட்சியில் உறுதிசெய்யப்பட்ட Battery/BESS முதலீட்டின் மூலம் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
இவற்றை தாண்டி A&D மற்றும் GCC நிறுவனங்கள் சில தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் முதலீடுகளை விரிவாக்கம் செய்ய தயாராக உள்ளனர்.
இவற்றையெல்லாம் ‘நாங்கள் கொண்டு வந்த ‘புதிய முதலீடு’ என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளாமல் புதிய நிறுவனங்களுடன் பேசுவாரா முதலமைச்சர்? புதிய ஒப்பந்தங்களைக் கொண்டு வரப் போகிறாரா என்று காத்திருக்கிறோம்!
Rolls-Royce, BAE Systems: Aerospace, Defence, MRO, R&Dல் மிகப்பெரிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் போடப்பட்ட அடித்தளம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாடு வெல்லட்டும்!
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!