Politics
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 15) நடைபெற்றது.
நெல்லை மாநகர் மாநகர் மாவட்ட தலைவர் ராமேஷ்வரன் தலைமையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே முன்னாள் மாவட்ட தலைவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு தொடங்கியது. அப்போது, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சங்கர பாண்டியன் மற்றும் உமாபதி சிவன் ஆகியோருக்கு இடையே புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
முதலில் வாய்மொழியாகத் தொடங்கிய இந்த மோதல், சில நிமிடங்களிலேயே முற்றியது. இதில் ஆத்திரமடைந்த இருவரும், எம்பி ராபர்ட் புரூஸ் மற்றும் பிற நிர்வாகிகள் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதனால் காங்கிரஸ் அலுவலகமே போர்க்களமாக மாறியது.
திடீரென ஏற்பட்ட இந்த கைகலப்பால் அதிர்ச்சியடைந்த மற்ற நிர்வாகிகள் மற்றும் எம்பி, இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். காமராஜர் பிறந்தநாள் போன்ற ஒரு முக்கிய தினத்தில், கட்சி அலுவலகத்திலேயே மூத்த நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே அதிருப்தியையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலம் காலமாக உள்ள காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிமோதல் இப்போதும் தொடருவதை பார்க்கும் போது, இன்னும் கட்சிக்குள் இருக்கும் நிலைமை தொடருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!