Politics

தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!

தவெக அரசின் அட்டூழியங்கள், சட்டத்திற்கு புறம்பாக செய்யும் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களின் தலைமையில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் முழு விவரம் பின்வருமாறு.

கடந்த 1.7.2026 அன்று ஆளுநர் அவர்களுக்கு அனுப்பட்ட புகாரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து குறித்து கடிதம் எழுதப்பட்டது. அதுகுறித்து இன்று ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர்ஜோசப் விஜய் அவர்கள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி, இடைத்தேர்தலில் த.வெ.க.கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறச் செய்வதாக வைகோ அவர்கள் அளித்த செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்ததை ஆளுநர் அவர்களிடம் தெரிவித்து, அதன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறப்பினர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., அவர்களை அவதூறு வழக்கில் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வற்புறுத்தியதை ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் அவர்களை த.வெ.க.சார்பில் அவரை தொடர்பு கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வலியுறுத்தியதுடன், அவர் விரும்பிய துறை அமைச்சர் பதவி கொடுப்பதாக நிர்ப்பந்தித்து குறித்தும் ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

வேப்பனஹள்ளி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் அவர்களையும் த.வெ.க. கட்சியில் இணையும்படியும், 50 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் வாரியத் தலைவர் பதவி அளிப்பதாகவும் ஆசைக்காட்டி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திட பேசியதாக ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

முதலமைச்சர் அவர்களின் நண்பர்கள், ஜான்ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணுரெட்டி ஆகியோர் அரசு அலுவல்களில் தலையிடுவதையும் – அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டதையும் மற்றும் அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனியாக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் – அதேபோல், முதலமைச்சரின் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக முதலமைச்சர் அவர்களின் தனி பாதுகாவலர் ஒருவர் பணியாற்றி வருவதும், அவர் முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சருடன் சட்டத்திற்கு புறம்பாக அவருடைனே பயணிப்பது குறித்தும் ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அனைத்து புகார்களையும் – புகார்களின் சாரம்சங்களையும் கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என கூறப்பட்டுள்ளது.

Also Read: "ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!