Politics
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது : தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் ஜூன் 20-ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் உரையாற்றிய திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும், ஒருமையில் பேசியதாகவும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் த.வெ.க., நகரச் செயலாளர் செல்வம் பொய்ப்புகாரை அளித்தார். இதன் அடிப்படையில், எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் என் மீது இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். எனவே, எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமின் மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆத்தூர் பேரூராட்சியில் இன்று ஆய்வு மேற்கொள்ளச் சென்றிருந்தவரை தவெக அரசு கைது செய்துள்ளது.
இதனைக் கண்டித்து ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் திமுக-வினர் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தவெக அரசு, யாரெல்லாம் தனது அரசுக்கு எதிராக பேசுகிறார்களோ அவர்களைக் குறிவைத்து கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
ஜனநாயக நாட்டில் கருத்துகளை எதிர்கொள்ள தயங்கும் தவெக அரசும், முதலமைச்சர் விஜயும் மிகவும் விமர்சனங்களைக் கண்டு நடுங்கிப்போய் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் மக்கள் பிரதிநிதியையும் அவசர அவசரமாக கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தவெக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட்” : ஆர்.எஸ்.பாரதி அதிரடி - முழு பேட்டி இங்கே!
-
“அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. போலீஸ் ராஜ்ஜியம்.. இந்த ஆணவம் அழிவிற்கு வழி”: மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
-
“குமரியில் அணுக்கனிமச் சுரங்கம்; கார்ப்பரேட் நலன்களுக்கான வளர்ச்சி இது”: தவெக அரசுக்கு CPI கடும் கண்டனம்!
-
“அதிகரிக்கும் தவெக நிர்வாகிகளின் ‘க்ரைம் ரேட்’.. பகுதி பகுதியாய் பட்டியலிடும் முரசொலி தலையங்கம்!”
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!