Politics
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பதவி நியமனத்திற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுவதாக த.வெ.க வழக்கறிஞரே, த.வெ.க பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“என் ஆட்சியில் லஞ்சம் இருக்காது, ஊழல் இருக்காது! நான்தான் இந்த ஆட்சியின் ஒற்றைப் பவர் சென்டர்! என்று கேமரா முன்னால் நின்று வீராவேசமாக ரீல்ஸ் விட்ட பொம்மை CM விஜய்யின் யோக்கியதை, இன்று உயர் நீதிமன்றப் படியேறி வீதிக்கு வந்து சந்தி சிரிக்கிறது!
அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை பகிரங்கமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு, சந்தையில் காய்கறி விற்பது போல அரசுப் பதவிகளை ஏலம் விடுவது வேறு யாருமல்ல, தவெகவின் தலைவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பொதுச் செயலாளரான அமைச்சர் ஆனந்தும், மாவட்டச் செயலாளர்களும்தானாம்!
இதைச் சொல்வது எதிர்க்கட்சிகள் அல்ல, சொந்தத் தவெக கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகியே உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து முகத்திரையைக் கிழித்துள்ளார்!
மேடையில் மட்டும் தூய சக்தி நாடகம், ஆனால் திரைக்குப் பின்னால் கட்சியின் பொதுச்செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை அத்தனை பேரையும் கமிஷன் ஏஜெண்டுகளாக மாற்றி லட்சக்கணக்கில் பதவி பேரம்!
அரசுப் பதவிக்காகத் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடமே இரக்கமில்லாமல் லஞ்சம் பிடுங்கும் இந்த பித்தலாட்டக் கும்பல், எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரணப் பொதுமக்களிடம் ஒரு வேலைக்கு எவ்வளவு கமிஷன் கேட்பார்கள்?
ஊழல் வழக்குகளில் சிக்கிய பெருச்சாளிகளுக்கெல்லாம் வாஷிங் மெஷினாக மாறி அடைக்கலம் கொடுப்பதில் தொடங்கி, இன்று நேரடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பதவிகளை விற்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்து நிற்கும் இந்தத் தவெகவை, இனிமேல் தமிழ்நாட்டைச் சூறையாட வந்த ஊழல் சக்தி என்றுதான் இனி அழைக்க வேண்டும்!”
Also Read
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!