Politics
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக போதைக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.
குறிப்பாக, கடந்த ஒரே மாதத்தில் திருச்சியில் இருவர் போதை ஊசி செலுத்தி உயிரிழந்துள்ளனர். ஆனால், இதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ, தடுக்காமல் தட்டிக்கேட்காமல் தாமதித்து வருகிறது.
இது தொடர்பாக தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு,
“திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம்பெண் ஒருவர் மரணமடைந்தார்.
ஒரு மாத்திற்குள் இரண்டு போதை ஊசி மரணங்கள் நடந்துள்ளன. இளைஞர்கள் இடையே போதை ஊசி புழக்கம் இந்த ஒருமாதத்தில் அதிகரித்துள்ளதை இந்த சம்பவங்கள் உறுதி செய்கின்றன.
ஒருபக்கம் போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மராத்தான் ஓடி விளம்பரம் செய்யும் முதல்வர் விஜய் அவர்கள், போதைப் பொருளை பயன்படுத்தியது போல thug life reels வெளியிட்டு போதை பொருளுக்கு Promotion செய்த அமைச்சர் சரத்குமார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்..?
திரைப்படங்களில் போதைப் பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பாட்டு பாடி இளைஞர்களை தவறாக வழிநடத்தியது போல இப்போது இப்படி மறைமுகமாக பொது வெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறாரா .?
இன்னும் எத்தனை இளைஞர்கள் போதை ஊசியால் மரணமடைய வேண்டும். எப்போது தான் மக்கள் பிரச்சினைகள் பற்றி வாய் திறக்க போறீங்க cm sir.?”
Also Read
-
“எங்களுடைய அரசாக இருந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
“ஆதாரம் இருக்குதா?.. பொய் பேசக்கூடாது” - பேரவையில் தவெக அமைச்சர்களை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“முதல்வர் விஜய்.. ஆட்சியை நடத்துங்கள்.. எதிர்க்கட்சியை கொச்சைப்படுத்தி காலத்தை ஓட்ட வேண்டாம்” - முரசொலி!
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!