Politics
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில், விஜய் நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பொறுப்புணராது ஆட்டம்போட்டது சர்ச்சையாகியுள்ளது.
அரசுப் பள்ளியில் விழா நடக்கிறதே, உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறோமே என்பதையெல்லாம் மறந்து, விஜய் நடித்த சச்சின் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘வாடி வாடி வாடி கைப்படாத சிடி’ என்ற பாடலுக்கு த.வெ.க நகர இணைச் செயலாளர் சுபாஷினி என்ற பெண்ணுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் அமைச்சர் விஸ்வநாதன்.
அரசுப் பள்ளிகளில் ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளே இடம்பெற வேண்டும் என கடந்த தி.மு.க ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழலில், த.வெ.க அரசு அந்நடைமுறைக்கு நேர் எதிராக செயல்படுவது, மாணவர்களின் அறிவாற்றலை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
விழிப்புணர்வுக்காக மாரத்தான் நடத்துகிறோம் என்று நடத்திய நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு மிகவும் பொறுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் அமைச்சர் விஸ்வநாதன் என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?