Politics
“அரசு அதிகாரிகளுக்கு இணையாக தவெக நிர்வாகிகள்.. தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் இடையூறு.. மக்கள் அதிருப்தி!”
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் பேரிடர் முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அரசு விதியை மீறி அரசியல் எந்தவித பொறுப்பிலும் இல்லாத, தமிழக வெற்றி கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரனுக்கு நாகை கோட்டாட்சியர் சங்கரநாராயணனுக்கு பக்கத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழா மேடையில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்துள்ள நிலையில், கீழே அமர்ந்த மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தவெக மாவட்ட செயலாளருக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
இதே போல வேதாரண்யம் தவெக வேட்பாளராக போட்டியிட்ட கிங்ஸ்லி ஜெரால்டு உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் மாவட்ட அதிகாரிகளுடன் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க மாநாட்டு அரங்கின் பிரதான கதவை தள்ளிக்கொண்டு தவெக துண்டுகளுடன் கட்சி தொண்டர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அரசு அதிகாரிகளுக்கு இணையாக தவெக கட்சி நிர்வாகிகள் செயல்படுவது அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் முரளி தலைமையில் வருவாய் தீர்வாயம் தீர்வாயம் நிகழ்ச்சி நடைபெற்றது,
இதில் பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சி, வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து ஓய்வூதிய தொகை, மகளிர் உரிமை தொகை, பட்டா, ஆதார் அட்டை ஆகியவற்றிக்கான மனுக்களை 500-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்டது.
அப்போது எம்.எல்.ஏ காமாட்சி அருகிலேய அமர்ந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மின்னல் குமார் வேண்டும்மென்றே எம்.எல்.ஏ காமாட்சிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தனது ஆதரவாளர்களுடன் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி அடுத்தடுத்து அரசு நிர்வாக செயல்பாடுகளில் தவெக நிர்வாகிகள் அமர்ந்து இடையூறு ஏற்படுத்துவது. ரீல்ஸ் மோகத்தில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!