Politics
“திமுக தயவில்தான் ஆட்சி நடக்கிறது.. நாம் தான் வழியனுப்பி வைத்தோம்” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை அண்ணா அறிவாயம் கலைஞர் அரங்கில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், செங்கல்பட்டு அதிமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தலைமையில் அதிமுக-வினர் 1500 பேர் தாய்க்கழகமான திமுக-வில் இன்று (ஜூன் 6) இணைந்தனர்.
இந்த பிரம்மாண்ட நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தாய்க்கழகமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட வந்தவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
அண்ணா அறிவாலயத்திற்கு வந்து கலைஞர் அரங்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். அந்த உணர்வோடு வந்துள்ள உங்களை மீண்டும் மீண்டும் நான் வரவேற்கிறேன்.
77 ஆண்டுகாலம் வெற்றி கண்ட, பவள விழாக் கண்டுள்ள, ஆறு முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுகவிற்கு நீங்கள் வந்து உள்ளீர்கள்.
பதவி, ஆசையை எதிர்பார்த்து ஆளும் கட்சியில் தான் மாற்றுக் கட்சியினர் இணைவர்கள், ஆனால் நீங்கள் எல்லாம் எதிர்க்கட்சியான திமுகவில் இணைய வந்துள்ளீர்கள், சொகுசை எதிர்பார்க்காமல், இங்கு வந்துள்ளீர்கள் என்பதை காணும் பொழுது உங்களின் தமிழ் மற்றும் கொள்கை உணர்வு தெரிகிறது.
திமுகவின் வரலாறு என்பது 1949லில் தொடங்கி, 52 போட்டியிடவில்லை என்றாலும், 57 போட்டியிட்டு ஐந்து இடங்களில் வெற்றி கொண்டோம், 62 எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, 67 அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பே, அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்று பணியாற்றினார், 71 கலைஞர் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற, 75 நெருக்கடி நிலையை எதிர்கொண்டோம், நெருக்கடி நிலையை எதிர்த்து லட்சக்கணக்கான மக்களை கூட்டி கலைஞர் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்.
தன் காரணமாக 76 ஆம் ஆண்டு நமது ஆட்சி கலைக்கப்பட்டது, மீண்டும் 87 ஆட்சி வந்தோம், 91 இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆதரவாக உள்ளது செயல்பட்டது கூறினர், 96 இல் மீண்டும் ஆட்சி பெற்றோம், 2006 இல் ஆட்சிப் பொறுப்பேற்றும், மீண்டும் 2021ல் ஆட்சி ஏற்று பல்வேறு சாதனைகளை படைத்தோம். வெற்றி தோல்வி என்பது திமுக பார்த்த ஒன்று, வெற்றி தோல்வியை கண்டு துவண்ட இயக்கம் அல்ல திமுக.
திமுகவின் தயவில் நடைபெற்று வரும் தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நாம் உறுதியோடு பணியாற்ற வேண்டும். அதற்காக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களிடம் சென்று தொடர்ந்து உழைத்து, திமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வர வேண்டும்.
தவெக ஆட்சி நடைபெறுவதே திமுகவின் தயவில் தான். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நம்முடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தோம்.
சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பல இடங்களில் திமுக தலைவரிடம் சொல்லிவிட்டுத்தான் கூட்டணிக்கு வந்தோம் என பேட்டியளித்துள்ளனர். நானும் ‘செல்லுங்கள், அது உங்கள் விருப்பம், அது உங்கள் ஜனநாயக உரிமை’ என்று கூறினேன்.
குடியரசுத் தலைவர் ஆட்சி மூலம் பா.ஜ.க தமிழ்நாட்டிற்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நானும் அவர்களை வழியனுப்பி வைத்தேன் என பேசினார்.
திமுக-வில் இணைந்த செங்கல்பட்டு அதிமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் பேசுகையில், பார் போற்றும் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நாம் இணைந்து உள்ளோம். எக்குக்கோட்டையான திமுகவில் இணைந்துள்ளது பெருமையாக கருதுகிறேன்.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார், அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நான் முதல்வன் திட்டம், இதன் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர், தமிழ்நாட்டின் கல்வி இடைநீற்றலை இந்த திட்டம் குறைத்துள்ளது.
25 ஆண்டு காலம் அதிமுகவில் விசுவாசத்துடன் பணியாற்றி, பல கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளேன், இருப்பினும் திமுகவில் இணைந்துள்ளேன் என்றால் அடுத்த இளைய தலைமுறைக்கு வழிநடத்தும் கட்சியாக திமுக உள்ளது என்றார்.
இன்னும் ஆறு மாதத்தில், அதிகபட்சமாக ஒரு வருடத்தில் இந்த காகித பூ ஆட்சி மாறி, மீண்டும் திமுக தலைவர் முதலமைச்சராக பதவி ஏற்பார், 234 தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும்.
Also Read
-
“தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்.. மான ஈனத்தைப் பற்றிக் கவலையில்லா காங்கிரஸ்!” : முரசொலி காட்டம்!
-
“ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.. எகிறும் எதிர்பார்ப்பு” : முழு விவரம் அறிக!
-
பிரவீன் சக்கரவர்த்தி சொல்லும் கூட்டணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை! : CPI, CPI(M) திட்டவட்டம்!
-
“அட்மினிஸ்ட்ரேஷனில் ‘அ’ கூடத் தெரியாத குதிரை பேர சி.எம் தானே நீங்க!” : திமுக ITWing கடும் விமர்சனம்!
-
“தவெக கூட்டணியா.. இதெல்லாம் அதிக பிரசங்கித்தனம்” - பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவுக்கு வலுக்கும் கண்டனம்!