Politics

“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

இந்திய அளவில் எளியோருக்கு வேலையும், அதன் வழி உரிய ஊதியமும் அளித்து வரும் வகையில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA) மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

குறிப்பாக, எளிய மக்கள் மீது கொண்டிருக்கிற வெறுப்பையும், காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, VB G RAM G என்ற புதிய மாற்று சட்டத்தை இயற்றியுள்ளது ஒன்றிய அரசு.

இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் நின்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் 389 இடங்களில் பேரெழுச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!

இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!”

Also Read: 20 Volvo அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்! : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!