Politics
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.17) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு என்ன?
தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களின் விவரங்கள் குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களுக்காக அனுமதிக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் விடுவிக்கப்பட்ட நிதிகளின் விவரங்கள், திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட இரயில்வே திட்டங்களுக்கான முன்மொழிவுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் தேசிய கல்விக் கொள்கை – ஒன்றிய அரசு திருத்தம் செய்வது எப்போது?
தி.மு.க எம்.பி கனிமொழி சோமு
தேசிய கல்விக் கொள்கையின் (NEP) சில விதிகள் தமிழ்நாட்டின் பாடத்திட்ட வடிவமைப்பு, மொழி கொள்கை மற்றும் மாநிலத்திற்கான கல்வி முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக இருப்பது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள இந்த விசயங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை என்ன? என்றும், ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை மதிக்கும் அதே வேளையில், தேசிய கல்விக் கொள்கையானது கூட்டாட்சி அமைப்புடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும் டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு எம்.பி. கேட்டுள்ளார்.
Also Read
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!
-
“VBGRAMG-க்கு எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!