Politics
“எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!” : கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பெ.சண்முகம் கண்டனம்!
தமிழ்நாட்டிற்கான ஒன்றிய அரசின் நிதிகளை நிறுத்தி வைப்பது, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை சூரையாடுவது போன்ற பல்வேறு முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமை நிகராளியான பிரதமர் மோடி, தேர்தலுக்காக மட்டுமே தமிழ்நாட்டில் தலைகாட்டி வருகிறார்.
பிரதமர் மோடியின் தேர்தல் கால வருகைகள் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மாற்றாது என அறிந்தும், தனது அரசியல் ஆதாயத்திற்காக மீண்டும் தமிழ்நாடு வர இருக்கிறார் அவர்.
அதிலும், குறிப்பாக விவசாயிகளுக்கு தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுத்துவிட்டு, தற்போது விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வருகிறார் பிரதமர் மோடி.
இதனைக் கண்டித்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
“விதைகள் மசோதா 2025, மின்சார மசோதா 2025, இரண்டையும் வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமாக்க திட்டமிட்டுள்ளது மோடி கூட்டம்.
விதைகள் சட்டம் என்பது விவசாயிகளின் தனி உரிமை, பண்பாட்டின் அடையாளம், அதை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரைவார்க்கவும் விதை விலையை தாறுமாறாக உயர்த்துவதன் மூலம் விவசாய உற்பத்தி செலவை அதிகரிக்கவும் தான்.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் என்பது நடைமுறையில் இருக்கிறது. இதை ஒழித்துக் கட்டி அபரிமிதமான கட்டணம் தீர்மானிக்கவும் மின்துறையை தனியார் கம்பெனியிடம் ஒப்படைக்க வழி செய்வதுதான் மின்சார சட்டம் 2025.
இப்படி விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை தொடர்ந்து செய்து வரும் பிரதமர் மோடி எந்த முகத்தோடு விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வருகிறார்.
அவரை வரவேற்க வர வேண்டும் என்று இங்கு சில கைக்கூலிகள் அழைப்பு வேறு விடுக்கிறார்கள். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.”
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!